வீடு வாடகை தர முடியாமல் ரோடு ரோடாக திரிந்தேன்
![வீடு வாடகை தர முடியாமல் ரோடு ரோடாக திரிந்தேன் வீடு வாடகை தர முடியாமல் ரோடு ரோடாக திரிந்தேன்](https://www.nativenews.in/h-upload/2023/03/23/1685793--.webp)
நடிகை ரஷ்மிகா மந்தனா (பைல் படம்)
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தானா சமீபத்தில் தன்னுடைய இளமைக்காலத்திலும் அனுபவித்த வறுமை, கொடுமையை பற்றி கூறியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும், இளைஞர்களின் கனவு கண்ணியாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ராஷ்மிகா மந்தனா.
இவர் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் இவருடைய முதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று தந்தது. இதனை அடுத்து விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது மேலும் மீண்டும் விஜய் தேவரகொண்டனுடன் இணைந்து டியர் காம்ரேட் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில் இதன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.
அதன் பிறகு தான் இவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. அந்த வகையில் கார்த்திக் நடிப்பில் தமிழில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். பிறகு கடைசியாக விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தினை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்க, தில்ராஜ் தயாரித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நிலையில் அதில் அவர் தன்னுடைய பெற்றோர் குறித்தும் தன்னுடைய வளர்ச்சி குறித்தும் பேசியுள்ளார். அதாவது என்னுடைய வளர்ச்சி குறித்து என் பெற்றோர் பெருமை எல்லாம் படவில்லை. காரணம் அவர்கள் சினிமா துறையில் இருந்து விலகி இருக்கிறார்கள். நான் என்ன செய்கிறேன் என்று கூட அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.
ஆனால் நான் விருதுகள் வாங்கும் பொழுது மட்டும் அவர்கள் பெருமையாக நினைத்துக் கொள்வார்கள். நான் இன்னும் சினிமா துறையில் சிறப்பாக செயல்பட்டு அவர்களுக்கு விருது வாங்கிய அவர்களை பெருமைப்படுத்துவேன். அது மட்டுமில்லாமல் என்னை அவர்கள் எந்த குறையும் இல்லாமல் நன்றாக வளர்த்தனர். நான் குழந்தையாக இருக்கும் பொழுது அவர்களால் முடிந்த அனைத்துமே எனது செய்து கொடுத்தார்கள்.
அதற்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன். இப்பொழுது நான் அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டிய தருணம். என்னுடைய குழந்தை பருவத்தில் என்னுடைய பெற்றோர்கள் பொருளாதார ரீதியாக பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார்கள். வாடகை கொடுக்க முடியாமல் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வீடு தேடி அலைந்தோம். குழந்தையாக இருக்கும் பொழுதே என்னுடைய பெற்றோர்கள் பட்ட கஷ்டங்களை எல்லாம் நான் உணர்ந்து இருக்கிறேன் என கூறியுள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu