அன்று ரூ.150; இன்று ரூ. 10 - தேனி மாவட்டத்தில் சரிந்தது தக்காளி விலை

அன்று ரூ.150; இன்று ரூ. 10 - தேனி மாவட்டத்தில் சரிந்தது தக்காளி விலை
X
தேனி மாவட்டத்தில் கிலோ 150 ரூபாய் வரை விற்ற தக்காளி இன்று 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை பெய்த காலத்தில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் வரத்து குறைந்து தேவை அதிகரித்து விலை கிடுகிடுவென உயர்ந்தது. கிலோ 150 ரூபாயினை எட்டியது. மழை குறைந்ததும் விளைச்சல் அதிகரித்தது. மார்க்கெட்டிற்கும் வரத்து அதிகரித்தது.

இதனால் , தக்காளியின் விலை படிப்படியாக குறைந்து சில நாட்களாக கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முதல் ரக தக்காளி விலையே 15 ரூபாய் தான். இந்த விலை குறைவால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் அனைத்து ரக காய்கறிகளின் விலைகளும் கிலோ 30 ரூபாய்க்கும் கீழே வந்துள்ளன.

Tags

Next Story