அதிமுகவை முடக்க அண்ணாமலை திட்டமா ?

அதிமுகவை முடக்க  அண்ணாமலை திட்டமா ?
X

பாஜக தலைவர் அண்ணாமலை(பைல் படம்)

பசும்பொன்முத்துராமலிங்க தேவர் விவகாரத்தை அண்ணாமலை கையில் எடுக்க வேறு காரணம் உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

முக்குலத்தோருடன் அதிமுக நெருக்கம் ஆகாமல் தடுத்து, அந்த இடத்தை பாஜக பிடிக்க வேண்டும் என்ற திட்டத்தை அண்ணாமலை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தேவர் - அண்ணா என்ற விவாதத்தை ஏற்படுத்தினால் அதிமுக அண்ணாவின் பக்கம் நிற்க வேண்டும். அப்படி நிற்கும் பட்சத்தில் தேவரை பகைக்க வேண்டிய நிலை அதிமுகவிற்கு ஏற்படும். இப்படி ஒரு விவாதத்தை ஏற்படுத்தவே தேவர் - அண்ணா என்ற விவாதத்தை அண்ணாமலை ஏற்படுத்தியதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக அரியலூர் மாவட்ட தலைவர் டாக்டர்.பரமேஸ்வரி இது தொடர்பாக செய்துள்ள போஸ்டில், ஆக.. அடுத்தமாதம் பசும்பொன் தேவர் சமாதிக்கு அதிமுக தலைமை போக முடியாதபடி சுற்றி ஆணி அடித்துவிட்டார் அண்ணாமலை. இனி தேவர் சமாதிக்கு பழனிச்சாமியோ ஜெயகுமாரோ சென்றால் எப்படியான கேள்விகள் எழும், என்ன மாதிரி எதிர்ப்புகள் எழும் என்பது ரகசியமல்ல‌. அண்ணா பற்றி தேவர் சொன்னதை கண்டித்துவிட்டு, இனிஅப்பக்கம் செல்ல முடியாது, ஒரு அடி கூட வைக்க முடியாது.

அண்ணாவை கடுமையாக காலமெல்லாம் எதிர்த்த தேவருக்கு வக்காலத்து வாங்கி அண்ணாமலையினை கண்டித்துவிட்டு, அப்பக்கம் செல்வது தேவருக்கான அவமரியாதை என்றே கருதப்படும். அதிமுகவின் வலுவான தென் மாவட்ட வாக்கு வங்கி இங்கே அடி வாங்கலாம்.

ஐ.பி.எஸ் படிப்பெல்லாம் படித்தவர்ன் முன், அடிவரிடு அரசியல்வாதிகள் நிற்க முடியாது என்பது சரியாகத்தான் இருக்கின்றது, என்று கூறி உள்ளார். இதன் காரணமாகவே அண்ணாமலை தேவர் விவகாரத்தை அண்ணாமலை கையில் எடுக்க காரணம் என்கிறார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!