கொரோனா பரவல் சூழலிலும் தேனியில் நடந்தேறிய மூன்று ஆர்ப்பாட்டம்

கொரோனா பரவல் சூழலிலும் தேனியில்  நடந்தேறிய மூன்று ஆர்ப்பாட்டம்
X

நாட்டு மாடு நலச்சங்கத்தினர் சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று ஆர்பாட்டங்களால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கொரோனா தொற்று பரவல் சூழலிலும் அடுத்தடுத்து மூன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

தேனி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை. மக்கள் தங்களது மனுக்களை பெட்டியில் போட்டுச் செல்லும் வகையில் புகார் பெட்டி வைத்திருந்தனர். எஸ்.பி., அலுவலகத்திலும் அதேபோல் புகார் பெட்டி வைத்திருந்தனர். கொரோனா பரவல் அதிகம் இருப்பதால் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

ஆனாலும், கெங்குவார்பட்டி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி டி.ஓய்.எப்.ஐ., அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் தாலுகா குழு உறுப்பினர் சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார். நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் சிலையை தேனியில் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, அகில இந்திய பார்வர்டு பிளாக் தேனி மாவட்ட பொதுச் செயலாளர் சக்கரவர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குடியரசுதினவிழாவில் தமிழக அரசு ஊர்தியை மத்திய அரசு அனுமதிக்காததை கண்டித்து, நாட்டுமாடு நலச்சங்கத்தினர் மாவட்ட தலைவர் கலைவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் தேனி இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags

Next Story
ai as the future