தொகுப்பூதிய செவிலியர்கள் கலந்தாய்வில் குளறுபடி என புகார்

தொகுப்பூதிய செவிலியர்கள் கலந்தாய்வில் குளறுபடி என புகார்
X
தொகுப்பூதிய செவிலியர்கள் கலந்தாய்வில் பெருமளவு குளறுபடி நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

தொகுப்பூதிய செவிலியர்கள் கலந்தாய்வில் பெருமளவு குளறுபடி நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.இது தொடர்பாக இச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுபின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு பணியிட மாற்ற கலந்தாய்வு தற்போது நடத்தப்படுகிறது. இதை வரவேற்கிறோம். அதேநேரம் கலந்தாய்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

இக் கலந்தாய்வில், ஏற்கெனவே உள்ள காலி பணியிடங்கள் பட்டியலில் காண்பிக்கப்படாமல் ஒரு சில இடங்கள் மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 80 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் வெறும் 2 பணியிடங்கள் மட்டுமே கலந்தாய்வில் காண்பிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 27 காலி பணியிடங்களுக்கு 6 பணியிடங்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 45 பணியிடங்களுக்கு 9 பணியிடங்களும், தருமபுரி மாவட்டத்தில் 56 பணியிடங்களுக்கு 16 பணியிடங்கள் மட்டுமே கலந்தாய்வில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பணியிட மாற்ற கலந்தாய்வுக்கு விண்ணப்பம் அளித்த செவிலியர்கள் பலரின் பெயர் கலந்தாய்வு பட்டியலில் இடம் பெறவில்லை. கடந்த காலங்களில் நடந்த கலந்தாய்வுகளில் முதல் நாளில் பங்கேற்று வேறு பணியிடத்தை தேர்வு செய்த செவிலியர்களின் பணியிடங்களை காலி பணியிடங்களாக அறிவித்து, மீண்டும் அந்த பணியிடங்களை செவிலியர்கள் தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுவும் இந்த கலந்தாய்வில் மறுக்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மையின்றி கலந்தாய்வு நடத்தப்படுவதால் பெரும்பான்மையான செவிலியர்கள் தாங்கள் விரும்பிய பணியிடத்தை தேர்வு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர். இப்பிரச்சினையில் சுகாதாரத் துறை அமைச்சர், செயலர் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் பணியிட மாற்ற காலந்தாய்வை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கேன்சர் இருக்கவங்க கண்டிப்பா இத சாப்டுங்க!..அவ்ளோ நன்மைகள் இருக்கு இந்த கோவக்காய்ல..