தேனியின் சாதனை பெண்கள்..... இறைச்சி விற்பனையிலும் தீவிரம்.....

தேனியின் சாதனை பெண்கள்.....  இறைச்சி விற்பனையிலும் தீவிரம்.....
X

பைல் படம்

அத்தனை துறைகளிலும் கோலேச்சி வரும் பெண்கள் இறைச்சி விற்பனை தொழிலிலும் முழுமையாக களமிரங்கி விட்டனர்.

கிராமத்தில் வீடுகளில் தங்களால் வளர்க்கப்படும் கோழிகளை அடித்துச் சாப்பிடுவதே பாவம் என நினைத்த பெண்களே அதிகம். ஒரு சிலர் தவிர பெரும்பாலானோர் கிராமங்களில் தாங்கள் வளர்த்த கோழிகளை கூட சாப்பிட மாட்டார்கள். அதனை விற்பனை செய்து விட்டு வேறு இடத்தில் கோழி வாங்கி அதன் இறைச்சியை சாப்பிடுவார்கள் அந்த அளவு மென்மையான சமூகமாக தமிழ் சமூகம் இருந்து வந்தது. காலப்போக்கில் வாழ்வியல் மாற்றங்களால் இன்று பெண்கள் இறைச்சி கடைகளில் பணிபுரிய தொடங்கி உள்ளனர்.

டீக்கடைகள், ஓட்டல்களில் பெண்கள் பணிபுரிவது வழக்கமான விஷயம். சில பெண்கள் மீன் விற்பனை செய்வதையும் பார்த்துள்ளோம். தேனியில் வித்தியாசமாக தங்கள் கணவருக்கு துணையாகவும், குடும்ப உறுப்பினர்களுக்கு துணையாகவும் ஆடு, கோழி இறைச்சி கடைகளில் பெண்கள் பணிபுரிகின்றனர். அதுவும் சமீபகாலமாக இறைச்சி கடைகளில் பணிபுரிய தொடங்கி உள்ளனர். ஆட்டு இறைச்சி கடைகளில் கணவருக்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, விற்பனை செய்யப்பட்ட இறைச்சிக்கு பணம் வாங்குவது போன்ற பணிகளை மட்டுமே முதலில் செய்தனர். பின்னர் படிப்படியாக இறைச்சி கழுவி சுத்தம் செய்து, இறைச்சி வெட்டுவது என அடுத்த நிலைக்கு வந்து விட்டனர்.

சில பெண்கள் ஆடு அடித்து உரித்து இறைச்சி வெட்டும் அளவுக்கு தொழிலில் முன்னேறி விட்டனர். அதேபோல் நாட்டுக்கோழி, பிராய்லர் கோழிக்கடைகள் பெரும்பாலும் பெண்கள் பிடிக்குள் சென்று விட்டன என்றே கூறலாம். அந்த அளவுக்கு பெண்கள் இறைச்சி விற்பனை தொழிலில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பெண்களின் குடும்ப பொறுப்பையும், தன்னம்பிக்கையையும், சகிப்புத்தன்மையையும் பார்த்தால் இவர்களுக்கு தனியாகவே ராயல் சல்யூட் அடிக்கலாம். அந்த அளவுக்கு இவர்களின் வாழ்வியல் பொறுப்பு மிகுந்தது, மகத்தானது.

Tags

Next Story