தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழா முக்கொம்பு நடுதலுடன் துவக்கம்
![தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழா முக்கொம்பு நடுதலுடன் துவக்கம் தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழா முக்கொம்பு நடுதலுடன் துவக்கம்](https://www.nativenews.in/h-upload/2022/04/21/1520089--.webp)
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் விழா தொடங்கியதை அறிவிக்கும் வகையில் முக்கொம்பு நடப்பட்டது.
தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழா வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழா. தென்மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாக்களில் முக்கியமான விழா. இந்த விழா முக்கொம்பு நடுதலுடன் தொடங்கியது. முக்கொம்பு நடும் நிகழ்ச்சிக்கு இந்து சமய அற நிலையத் துறை உதவி ஆணையர் வனிதா தலைமை வகித்தார். கோயில் செயல் அலுவலர் சுரேஷ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி, ஏசிவி மில் அதிபர் குமார், தேனி ஒன்றிய திமுக செயலாளர் சபாபதி, தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் மாநில தலைவர் எம்.பி.எஸ்.முருகன், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி, துணைத் தலைவர் மணிமாறன் உட்பட ஏராளமான வி.ஐ.பி.,க்கள் பங்கேற்றனர். பல ஆயிரம் பக்தர்களும் பங்கேற்றனர். அன்னதான விழாக்குழு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானத்தினை பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்கள்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் விழாவிற்காக தேனி மாவட்டத்தில் மிகப்பெரும்பான்மையான மக்கள் விரதம் தொடங்குவார்கள். ஒவ்வொருவரின் வசதிக்கேற்ப ஒரு வாரம் முதல் 21 நாள் வரை விரதம் இருப்பார்கள். சிலர் சித்திரை முதல் தேதியே விரதம் தொடங்கி விட்டனர். முக்கொம்பு நடப்பட்டதால், நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்சி நடைபெற்றது. தொடர்ந்து வரும் மே 10ம் தேதி வரை நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள். மே 10 முதல் 17ம் தேதி வரை விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த குறிப்பிட்ட நாட்களில் பல லட்சம் பக்தர்கள் கோயிலில் கூடி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்துவார்கள். வழக்கத்தை விட இந்த ஆண்டு கூட்டம் பல மடங்கு அதிகம் இருக்கும் எனஎதிர்பார்ப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu