தேனி: தடுப்பூசி முகாம்களை கலெக்டர் ஆய்வு செய்தார்
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகள் மற்றும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிப்பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா பெருந்தொற்று தடுப்பு பணிகள் தொடர்பான காய்ச்சல் மற்றும் தடுப்பூசி முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணையாக 1,29,932 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 28,045 நபர்களுக்கும் என மொத்தம் 1,57,977 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, போடிநாயக்கனூர், பெரியகுளம், சின்னமனூர் மற்றும் தேனி வட்டாரத்திற்;கு உட்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில்; தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. தடுப்பூசி முகாமினை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடம் முறையாக முகக்கவசம் அணிவது பற்றியும், சமூக இடைவெளியினை சரிவர பின்பற்றுவது குறித்தும் எடுத்துரைத்தார்.
மேலும், மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் வகையில், காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, ஆண்டிபட்டி, போடிநாயக்கனூர், சின்னமனூர், கம்பம், கடமலைக்குண்டு, பெரியகுளம், தேனி மற்றும் உத்தமபாளையம் ஆகிய வட்டாரங்களுக்கு உட்பட்ட குறிப்பிட்ட பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றது. போடிநாயக்கனூர்-முந்தல் மற்றும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் உள்ள மின்சாரவாரிய அலுவலக வளாகம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற காய்ச்சல் முகாம்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu