தீபாவளி வியாபாரம் மந்தம், பட்டாசு விற்பனையும் ஏமாற்றியது -தேனி வியாபாரிகள் வருத்தம்

தீபாவளி வியாபாரம் மந்தம், பட்டாசு விற்பனையும் ஏமாற்றியது  -தேனி வியாபாரிகள் வருத்தம்
X

இன்று மாலை ஆறு மணிக்கு  தேனி பட்டாசு கடையில் ஓரளவு கூட்டம் காணப்பட்டது. கடைசி நேர விற்பனை ஓரளவு சுமாராக இருந்தது. மொத்தத்தில் வியாபாரம் டல் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் பெரும் ஏமாற்றத்தை கொடுத்து விட்டதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு தீபாவளி வியாபாரம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் வழக்கமாக தீபாவளிக்கு 10 நான் முன்பே வியாபாரம் களை கட்டும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் நாள் கூட பஜார் வெறிச்சோடி கிடந்தது. ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், பாத்திரக்கடைகள், பர்னிச்சர்கள், டூ வீலர் விற்பனை என அனைத்துமே வழக்கமான விற்பனையுடன் ஒப்பிடுகையில் 50 முதல் 60 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.

குறிப்பாக சாலையோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள் முழுமையான ஏமாற்றத்தை சந்தித்தனர். காரணம் தேனி மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பில் இருந்து இன்று நடுத்தர வர்க்கமும், அடித்தட்டு மக்களும் மீளவில்லை.

மேல்தட்டு வர்க்கமும், அரசு ஊழியர்களும் மட்டுமே பொருளாதார பாதிப்பு இல்லாத வாழ்க்கை வாழ்கின்றனர். மற்ற அனைத்து தரப்பினரும் வீழ்ச்சியில் இருந்து மீளாததால் இந்த ஆண்டு தீபாவளி தொடர்பான அத்தனை வியாபாரங்களும் பலத்த அடி வாங்கின. குறிப்பாக சாலையோர வியாபாரம், சிறு வியாபாரம் இதுவரை இல்லாத நெருக்கடியை சந்தித்தது.

பட்டாசு விற்பனை கூட இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல்நாளும், தீபாவளி அன்றும் (அதாவது இன்று) மட்டுமே இருந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil