தேனி மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற கவுன்சிலர் இடங்கள் விவரம்
தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகளில் உள்ள 177 கவுன்சிலர் பணியிடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் இரண்டு பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதம் உள்ள இடங்களில் 103 இடங்களை தி.மு.க., கைப்பற்றி உள்ளது. அ.தி.மு.க., 45 இடங்களையும், பா.ஜ., நான்கு இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு இடங்களையும், மார்க்சிஸ்ட் ஒரு இடத்தையும், காங்., ஐந்து இடங்களையும் பெற்றுள்ளது. சுயேட்சைகள் உட்பட பிற கட்சிகள் 17 இடங்களை பெற்றுள்ளன.
22 பேரூராட்சிகளில் உள்ள 336 இடங்களில் 5 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 196 இடங்களை பெற்று தி.மு.க., முதல் இடத்தையும், 65 இடங்களை பெற்று அ.தி.மு.க., இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. பா.ஜ., நான்கு இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களையும், மார்க்சிஸ்ட் நான்கு இடங்களையும், காங்., ஒரு இடத்தையும், சுயேட்சைகள் உட்பட இதர கட்சிகள் 64 இடங்களையும் பெற்றுள்ளனர்.
ஆக மொத்தம் தேர்தல் நடைபெற்ற 506 கவுன்சிலர்கள் பதவிக்கு (ஏழு பேர் போட்டியின்றி தேர்வு) 299 இடங்களை பெற்று தி.மு.க., முதல் இடத்தையும், 110 இடங்களை பெற்று அ.தி.மு.க., இரண்டாம் இடத்தையும், முதன் முறையாக தனித்து களம் கண்டுள்ள பா.ஜ.க, குறைந்த இடங்களில் போட்டியிட்டாலும் 8 இடங்களை பெற்று மாவட்ட அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் 4 இடங்களையும், மார்க்சிஸ்ட் 5 இடங்களையும், காங்கிரஸ் ஆறு இடங்களையும், சுயேட்சைகள் உட்பட இதர கட்சியினர் 81 இடங்களையும் பெற்றுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu