மழைக் காலம் முடியும் வரை அனுமதியில்லை: தேனி வனத்துறை அதிகாரிகள் அதிரடி

மழைக் காலம் முடியும் வரை அனுமதியில்லை:  தேனி வனத்துறை அதிகாரிகள் அதிரடி
X

தேனி மாவட்டத்தில் பெய்யும் மழையால் சுருளிஅருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மழைக்காலம் முடியும் வரை தேனி மாவட்ட அருவிகள், ஆறுகளில் குளிக்க தடை நீடிக்கும் என வனத்துறை அதிகாரிகள் அறிவிப்பு

டிசம்பர் மாதம் நிறைவடையும் வரை தேனி மாவட்ட அருவிகள், ஆறுகளில் குளிக்க அனுமதிக்க முடியாது என தேனி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் தற்போது மிக, மிக சூப்பரான ஒரு பருவநிலை நிலவி வருகிறது. தேனி மாவட்டத்தின் நீர்வளம், மலைவளம், இயற்கை சூழல், பருவநிலை, மேகமூட்டம், இருளடைந்த பகல் என தற்போது நிலவும் பருவநிலை சிம்லா, நைனிடால், டார்ஜிலிங்கை தோற்கடித்து விடும். அந்த அளவு ஒரு சூப்பரான பருவநிலை நீடிக்கிறது.

இந்த பருவநிலை வரும் டிசம்பர் இறுதி வரை நீடிக்கும். ஜனவரி 15ம் தேதிக்கு மேல் தான் தேனி மாவட்டத்தில் வெயில் முகம் காட்டும். இந்த பருவநிலையில் ஆறுகள், ஏரிகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை பார்க்கும் அனைவருக்கும் குளித்து கொண்டாட தோன்றும். ஆனால், தேனி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்குள் வெள்ளத்திற்கு ஆறு பேரை பழி கொடுத்து விட்டோம். இனியாவது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஏதாவது ஒரு பகுதியில் மழை பெய்து கொண்டே உள்ளது. இதனால் எந்த இடத்தில் எந்த நிமிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதே தெரியவில்லை. எனவே, சுருளி அருவி, கும்பக்கரை அருவி, சின்னசுருளி, குரங்கனி, முல்லை பெரியாறு, வராகநதி, சண்முகாநதி, சுருளி ஆறு, பாலாத்து கோம்பை என எங்குமே யாருக்கும் குளிக்க அனுமதியில்லை. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மீட்பது சிரமம் ஆகி விடும். எனவே மக்கள் தங்கள் உயிரை பாதுகாக்க தண்ணீரில் இறங்கவே வேண்டாம். டிசம்பர் இறுதி வாரம் அல்லது ஜனவரி முதல் வாரம் நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் நீங்கள் நீர் நிலைகளில் குளிக்கலாம். அதுவரை பொறுமையாக இருங்கள் என தேனி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!