தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்

தேனி மாவட்டம் கம்பத்தில்   கஞ்சா வியாபாரியின்  சொத்துக்கள் முடக்கம்
X
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி முருகன் என்பவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன.

தேனி மாவட்டம் கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 52.) இவர் மீது கஞ்சா பதுக்கல், விற்பனை தொடர்பாக ஆறு வழக்குகள் உள்ளன. முருகனின் சொத்துக்களை முடக்க போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு டி.எஸ்.பி., ரோகித்நாதன்ராஜகோபால் தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்தார். இவரது பரிந்துரையினை ஏற்று, முருகனின் நிலம், அவரது வங்கி கணக்கு, அவரது மனைவி வங்கிக்கணக்குகளில் இருந்த 10 லட்சம் ரூபாய் பணம் முடக்கப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!