தேனி 29வது வார்டு அதிமுக வேட்பாளர் ஷீலா வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

தேனி 29வது வார்டு அதிமுக வேட்பாளர் ஷீலா வீடு வீடாக வாக்கு சேகரிப்பு
X

தேனி 29வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் ஷீலா வீடு, வீடாக ஓட்டு சேகரித்தார்.

தேனி 29வது வார்டு அதிமுக வேட்பாளர் ஷீலா மக்களுக்கு அரசின் 29 நலத்திட்டங்களையும் பெற்றுத்தர தனி அலுவலகம் அமைப்பதாக உறுதி.

தேனி நகராட்சி 29வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் ஆசிரியை ஷீலா வீடு, வீடாக ஒட்டு சேகரித்தார். அ.தி.மு.க., தேனி நகர செயலாளர் கிருஷ்ணக்குமார் உட்பட முக்கிய வி.ஐ.பி.,க்கள் உடன் சென்றனர்.

ஆசிரியை ஷீலா பேசியதாவது: எனது வார்டு முழுக்க பல முறை சுற்றி வந்து மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டேன். இப்பகுதி மக்களை வறுமையில் இருந்து மீட்க வேண்டும். அதற்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் 29 சமூக நலத்திட்டங்களும் மக்களுக்கு கிடைக்க வேண்டும். இதற்கென தனி அலுவலகம் திறக்க உள்ளேன். இப்பகுதி பெண்கள், முதியோர் வாழ்வியல் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது எனது முக்கிய பணி ஆகும்.

அதேபோல் இப்பகுதி அனைத்துதரப்பு மக்களுக்கும் வேலை வாய்ப்பு பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுப்பேன். அரசின் அத்தனை நலத்திட்டங்களையும் பெற்றுத்தர சிறப்பு அலுவலகம் அமைப்பேன். மக்கள் எனக்கு வாய்ப்பளி்த்து நான் சேவை செய்ய அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

Tags

Next Story
why is ai important to the future