பழனிசெட்டிபட்டியில் முதலாளி வீட்டில் திருடியவர் கைது

பழனிசெட்டிபட்டியில் முதலாளி வீட்டில் திருடியவர் கைது
X
தேனி பழனிசெட்டிபட்டியில் முதலாளி வீட்டில் திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தேனி பழனிசெட்டி அரசுநகரில் வசிப்பவர் பிரகாஷ், 38. இவர் பழனிசெட்டிபட்டியில் டெண்டல் லேப் வைத்து நடத்தி வருகிறார். இந்த லேப்பில் ஹரன்குமார், விக்னேஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரகாஷ் குடும்பத்துடன் சென்னை சென்று விட்டார். இந்த சூழலை பயன்படுத்தி ஹரன்குமார் தன் முதலாளி வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 14 பவுன் நகையினை திருடி விட்டார். பிரகாஷ் கொடுத்த புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹரன்குமாரை, 23 கைது செய்தனர்.

Tags

Next Story