ஜவுளிக்கடையும் வீதிக்கு வந்து விட்டது

ஜவுளிக்கடையும்  வீதிக்கு வந்து விட்டது

பெரியகுளம் - வடுகபட்டி நான்கு வழிச்சாலை சந்திப்பில் ரோட்டோர புளியமரத்தடியில் செயல்படும் ஜவுளிக்கடை. இந்தக்கடை வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயம் இருக்கும். மற்ற தினங்களில் சீசனுக்கு ஏற்ப கடை போடுவார்கள். 

தமிழகத்தில் சாலையோரங்களில் கிடைக்காத பொருட்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது.

தமிழகத்தில் சாலையோரங்களில் கிடைக்காத பொருட்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. தமிழகத்தில் கொரோனா பேரிடருக்கு பின்னர் வேலையிழப்பு அதிகமானது. குறிப்பாக 45 வயதை கடந்த பலரும் வேலையிழந்து விட்டனர்.

இவர்கள் இந்த வயதிற்கு மேல் மீண்டும் வேறு ஒரு நபரிடம் வேலைக்கு சேர்ந்து குறைந்த சம்பளத்தில், வாழ்க்கை நடத்த வாய்ப்பில்லை. எனவே பலரும் தொழிலில் இறங்கி விட்டனர். நகர் பகுதிக்குள் கடை வாடகைக்கு பிடித்து, தொழில் நடத்த பல லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படும். இதனால் இவர்கள் ரோட்டோரங்களை நாடுகின்றனர். நகர் பகுதிக்கும் ரோட்டோர கடைகள் நிரம்பி வழிவதால், இவர்கள் சாலையில் பயணிக்கும் பயணிகளை குறி வைத்து கடைகள் விரித்து விட்டனர்.

தமிழகத்தில் ரோட்டோர கடைகள் இதனால் பல லட்சக்கணக்கில் பெருகி விட்டன. ரோட்டோரங்களில் கிடைக்காத பொருட்களே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. இதுவரை சிறிய அளவில் மட்டுமே, பனியன் துணிகளை வாங்கி ரோட்டோரம் கடை விரித்து விற்பனை செய்த இந்த சிறு வியாபாரிகள் இப்போது முழு அளவிலான ஜவுளிக்கடைகளையே விரித்து விட்டனர்.

சட்டை முதல் அத்தனை ரெடிமேட் ஜவுளிகளும், துணி ரகங்களும் இவர்களிடம் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்த துணிகளை சாலைகளில் பயணிப்பவர்கள் விரும்பி வாங்குகின்றனர். சிலர் அதிக எண்ணிக்கையில் வாங்குவதும் சாலையோர ஜவுளி வியாபாரிகளுக்கு நம்பிக்கையினை ஏற்படுத்தி உள்ளது. கிராமங்களில் சைக்கிள், டூ வீலர்களில் சென்று ஜவுளி விற்பனை செய்வதை விட, இப்படி சாலையோரங்களில் ஒரு மரத்தடியில் நின்று விற்பனை செய்வது, அதிக சுலபமாகவும், வருவாய் மிகுந்ததாகவும் உள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story