போடி அருகே சீரான குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

போடி அருகே சீரான குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
X

மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் சீரான குடிநீர் கேட்டு பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை. பாதாள சாக்கடைக்கு தோண்டிய ரோடுகள் கடும் மேடு, பள்ளங்களுடன் உள்ளன. இவற்றை சீரமைக்கவில்லை. பொதுக்கழிப்பிடம் சரியாகவில்லை.

கனமழையால் ரோடுகள் எல்லாமே பெயர்ந்து சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்கவில்லை. இது போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ரோடு மறியலிலும் ஈடுபட்டனர். அதிகாரிகள் இந்த குறைபாடுகளை சரி செய்து தருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags

Next Story
ai future project