காய்கறி விலை குறைவு.. நிறைய வாங்கி நல்லா சாப்பிடுங்க...
பைல் படம்
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் தேனி மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது. இருப்பினும் வெளிமார்க்கெட்டில் விலை சற்று உயர்ந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டும் வகையில், உழவர்சந்தை விலை நிலவரத்தையும், வெளிமார்க்கெட்டில் விலை நிலவரத்தையும் ஒளிபரப்பும் டிஜிட்டல் போர்டு சந்தையில் வைத்துள்ளனர். உண்மையில் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை விட வெளிமார்க்கெட்டில் விலை அதிகம் தான் விற்கப்படுகிறது.
உழவர்சந்தை விலை நிலவரம்: (விலை கிலோவிற்கு ரூபாயில்) தக்காளி - 10, கத்தரிக்காய்- 40, வெண்டைக்காய்- 35, கொத்தவரைக்காய்- 25, சுரைக்காய்- 25, புடலங்காய்- 36, பாகற்காய்- 30, தேங்காய்- 28, உருளைக்கிழங்கு- 22, கருணைக்கிழங்கு- 36, சின்ன வெங்காயம்- 36, பெல்லாரி- 20, வாழைப்பூ - 10, வாழைத்தண்டு- 10, வாழைக்காய்- 20, கீரை வகைகள்- 20, மாங்காய்- 30, மொச்சக்காய்- 50, பீட்ரூட்- 15, நுால்கோல்- 20, முள்ளங்கி- 16, முட்டைக்கோஸ்- 15 என விற்கப்படுகிறது. மொத்தம் 56 வகை காய்கறி விற்கப்பட்டாலும், அத்தனை காய்கறிகளின் விலைகளும் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எலுமிச்சை பழம் மட்டும் கிலோ ரூ.130 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் சில நாட்களில் இதன் விலை இன்னும் கூடும்.
வெயில் காலத்தில் மட்டன், சிக்கன், மீனை குறைத்துக் கொள்ளுங்கள். காய்கறி உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள் என மருத்துவத்துறை அறிவுறுத்தி உள்ளது. எனவே பொதுமக்கள் தற்போது அசைவ உணவுகளை குறைத்துக் கொண்டு சைவ உணவுகளை சாப்பிட்டால், விவசாயிகளுக்கும் நல்லது. ஓரளவு விலை கிடைக்கும். மக்களுக்கும் நல்லது. உடல் ஆரோக்கியமாக இருக்கும். மருத்துவ செலவுகள் இருக்காது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu