முப்படை தளபதியின் நினைவாக அமைக்கப்படும் நினைவுத்தூண்

முப்படை தளபதியின் நினைவாக  அமைக்கப்படும் நினைவுத்தூண்
X

பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவையொட்டி, விபத்து ஏற்பட்ட தினமான டிசம்பர் 8ம் தேதி இந்த நினைவு தூண் திறக்கப்படுகிறது

முப்படையின் முன்னாள் தளபதி பிபின்ராவத் மற்றும் 14 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த இடத்தில் நினைவுத்துாண் அமைக்கப்படுகிறது.

பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவையொட்டி, விபத்து ஏற்பட்ட தினமான டிசம்பர் 8ம் தேதி இந்த நினைவு தூணை திறக்க ராணுவத்தினர் முடிவு செய்துள்ளனர்.

கடந்த 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ம் தேதி கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து, நீலகிரி மாவட்டம், வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபிப் ராவத் ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் என்ற இடத்தில் மோசமான வானிலை மற்றும் மேக மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் விபத்து குறித்து நஞ்சப்ப சத்திரம் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதன் பேரில் வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பிபின் ராவத் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவையொட்டி, விபத்து ஏற்பட்ட தினமான டிசம்பர் 8ம் தேதி இந்த நினைவு தூணை திறக்க ராணுவத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
ai based agriculture in india