கூடலூரில் மனைவி மீது இருந்த கோபத்தால் மைத்துனரை கொல்ல முயன்றவர் கைது

கூடலூரில் மனைவி மீது இருந்த கோபத்தால்  மைத்துனரை கொல்ல முயன்றவர் கைது
X
கூடலூரில் மனைவி மீது இருந்த கோபத்தால் மைத்துனரை ஜீ்ப்பை ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், கூடலூரை சேர்ந்த ராஜகோபால்(வயது 40,) ராஜலட்சுமி, (27) தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. ராஜலட்சுமி கணவனுடன் கோபித்துக் கொண்டு கம்பத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு தன் குழந்தைகளை பார்க்க ராஜகோபால் சென்றார். கணவன் மனைவிக்கு இடையே தகராறு நடந்துள்ளது. இதனை பார்த்த ராஜலட்சுமியின் அண்ணன் செந்தில்குமார் தனது தங்கையின் கணவரை கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த ராஜகோபால் தான் வந்த ஜீப்பினை வேகமாக ஓட்டி தனது மைத்துனர் செந்தில்குமார் மீது மோதி அவரை கொல்ல முயன்றார். இச்சம்பவத்தில் செந்தில்குமார், அருகில் நின்றிருந்த மஞ்சுளா, ஜீவிதா என்ற குழந்தை உட்பட 3 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கம்பம் இன்ஸ்பெக்டர் லாவண்யா ஜீப்பை ஏற்றி கொல்ல முயன்ற ராஜகோபாலை கைது செய்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்