பாலியல் வழக்கில் நீண்ட நாட்களாக தேடப்பட்டவர் தேனி டி.எஸ்.பி., அலுவலகத்தில் சரண்
கைது செய்யப்பட்ட முருகன்
தேனி:
தேனி நகரில் உள்ள மதுரை சாலையில் பங்களாமேடு அருகே கணபதி சில்க்ஸ் என்ற பெயரில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது. இந்த கடையினை மாரியப்பன் மகன் ஜி.எம்.முருகன் (வயது 32) நடத்தி வருகிறார்.
இந்த ஜவுளிக்கடையின் வளாகத்திற்குள், பெரியகுளம் அருகே உள்ள டி. காமக்காபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன கருப்பன் என்பவருடைய மகள் எம்.ஏ., ஆங்கிலம் படித்த மேனகா (29). என்பவர் டிசைனர் ஸ்டுடியோ மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையத்தை நடத்தி வந்தார்.
இந்நிலையில் கணபதி சில்க்ஸின் உரிமையாளர் முருகன், மேனகாவிடம், முதலில் நட்புடன் பழகி வந்தார். அதன் பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது. இதனைஅடுத்து மேனகாவை திருமணம் செய்து கொள்வதாக நம்பவைத்து, ஏமாற்றி, முருகன் ஜவுளி கடைக்குள் உள்ள ஒரு அறையில் வைத்து பாலியல் உறவு கொண்டதாகவும், அதற்கு அடுத்து முருகன் தங்கியுள்ள தேனி பாரஸ்ட் ரோட்டில் உள்ள வீட்டில் வைத்து பலமுறை பாலியல் உறவு கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி முருகன் அவரது மேனேஜர் வினோத்தை சாட்சியாக வைத்து மேனகா கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். இதன் பின்னர் மேனகாவை சந்திப்பதை தவிர்ப்பதற்காக முருகன் தனது செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்து வைத்துக்கொண்டார்.
இதுகுறித்து மேனகா முருகனை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, தான் சின்னமனூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அமெரிக்காவில் செட்டில் ஆக போவதாகவும் கூறியுள்ளார். மேலும் உன்னை திருமணம் செய்தது ஒரு நாடகம் என்றும் கூறியதோடு, தொந்தரவு செய்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக மேனகா தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி அன்று புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி தொழிலதிபர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த முருகனை தேடி வந்தனர்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த தொழிலதிபர் முருகன் என்பவர் நேற்று தேனி டி.எஸ்.பி., அலுவலகத்தில் சரணடைந்தார். இதனை அடுத்து தேனி அனைத்து மகளிர் போலீசார் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu