பெரியகுளம் அருகே தம்பதியினர் வாங்கிய நகை சில நிமிடங்களில் திருட்டு

பெரியகுளம் அருகே  தம்பதியினர் வாங்கிய நகை சில நிமிடங்களில் திருட்டு
X
பெரியகுளம் அருகே தம்பதியினர் வாங்கிய நகை சில நிமிடங்களில் திருட்டு போனது பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் மேல்மங்கலத்தை சேர்ந்தவர் முத்தையா (வயது50.). இவரது மனைவி சண்முகவடிவு,( 47.) இவர்கள் இருவரும் பெரியகுளம் தென்கரை பஜாரில் உள்ள ஒரு கடையில் மூன்று பவுன் நகை வாங்கினர். பின்னர் ஜூஸ் குடித்து விட்டு தங்களது டூ வீலரில் மேல்மங்கலம் சென்றனர். வீட்டில் போய் பார்த்த போது நகையினை காணவில்லை. எங்கு திருட்டு போனது என்பது தெரியவில்லை. இதுபற்றி தென்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story