ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் கர்நாடகவில் ஏன் இப்போது தேர்தல்
தி.மு.க.செய்தி தொடர்பாளர் இளங்கோவன்- எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.(பைல் படம்)
ஒரேநாடு ஒரே தேர்தல் என்றால் தற்போது கர்நாடாகாவில் ஏன் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை திமுக எழுப்பியுள்ளது. தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டம் அமலாகப்போகிறது. வரும் 2024ம் தேதி லோக்சபா தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் தேர்தல் நடக்கும். அப்போது அ.தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது: எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டம் தெரியாது என நினைக்கிறேன். நாங்களே ஆட்சியை கலைத்தால் தான் தேர்தல் வரும். கர்நாடகத்தில் ஆட்சியிலிருந்த எஸ்.ஆர். பொம்மை வழக்கில் சட்டசபையை மத்திய அரசு உள்நோக்கத்துடன் கலைக்கும் அதிகாரத்துக்கு உச்சநீதிமன்றத்தால் செக் வைக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு 1993ல் வந்த பிறகு பாஜக எம்எல்ஏ- க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கலைத்தது வருகிறதே தவிர வேறு எந்த சட்டசபையும் கலைக்கப்படவில்லை. எனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டம் தெரியவில்லை.
ஓபிஎஸ் -க்காக இப்படி பேசுகிறார். இந்தப் பேச்சு என்பது ஓ பன்னீர் செல்வத்துக்கு எதிரான பேச்சு தானே தவிர அரசியல் பேச்சு அல்ல. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என கூறினால் தான் அவருடன் இருப்பவர்கள் அங்கேயே இருப்பார்கள். ஓ பன்னீர் செல்வம் பக்கம் செல்ல மாட்டார்கள் என்பதற்காக இப்படி பேசுகிறார். இதில் வேறு ஒன்றும் இல்லை.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்றால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கர்நாடகா தேர்தலை தள்ளி வைப்பார்களா?. ஒரே நாடு ஒரே தேர்தலை அரசின் கொள்கையாக சொல்லி வருகிறார்களே தவிர அதனை சாத்தியப்படுத்த முடியாது என்பது அரசுக்கும் தெரியும். உலகத்துக்கும் தெரியும். இந்த நாடு ஒரே நாடு எனினும் வரலாறு தெரியாமல் பேசுகிறார்கள். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது என்றால் எடப்பாடி பழனிச்சாமி முதலில் மோடியை சந்தித்து கர்நாடகா தேர்தலையும் அடுத்தாண்டு வைத்து கொள்ளுங்கள் என கூற வேண்டும்'' என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu