தென்மாவட்டங்களுக்கு தமிழக முதல்வர் மீண்டும் பயணம்

தென்மாவட்டங்களுக்கு தமிழக முதல்வர் மீண்டும் பயணம்
X

மு.க.ஸ்டாலின்

தென் மாவட்டங்களுக்குச் வந்து விட்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், அடுத்த வாரம் மூன்று நாட்கள், மீண்டும் தென் மாவட்டங்களுக்கு வர உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வரும் 14ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் செல்கிறார். அங்கு, தோட்டநுாத்து என்ற இடத்தில், இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 321 வீடுகளை, பயனாளிகளிடம் வழங்க உள்ளார். அன்று இரவு மதுரையில் தங்குகிறார்.

மறுநாள் காலை அண்ணா பிறந்த நாளையொட்டி, மதுரை சிம்மக்கல் அருகே நெல்பேட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறார். அதன் அருகில் உள்ள துவக்கப் பள்ளியில், 'முதல்வரின் காலை உணவு' திட்டத்தை துவக்கி வைக்க உள்ளார். பின்னர் விருதுநகரில் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!