நடுங்கும் தமிழகம்... அதிகரிக்கும் உயிரிழப்பு..?

நடுங்கும் தமிழகம்... அதிகரிக்கும் உயிரிழப்பு..?
X

பைல் படம்

கடும் குளிர் காரணமாக முதியவர்கள், அதிகளவில் உடல்நலக்குறைபாட்டுடன் இருப்பவர்களின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத கடும் குளிர் நிலவுகிறது. இதனால் முதியவர்கள், அதிகளவில் உடல்நலக்குறைபாட்டுடன் இருப்பவர்களின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

வழக்கமாகவே பனிக்காலங்களில் உயிரிழப்பு அதிகம் இருக்கும். தற்போது இதுவரை தமிழகம் இல்லாத அளவுக்கு குளிர் நிலவி வருகிறது. கிட்டத்தட்ட தமிழகம் முழுமையாக குளிரில் சிக்கி உள்ளது என்றே கூறலாம். தமிழகத்தில் சராசரி வெப்பநிலை 16 டிகிரி செல்சியசுக்கு கீழே குறைந்து விட்டது. இரவு தொடங்கி அதிகாலை வரை கடும் குளிர் காணப்பட்ட ஊர்கள், அதாவது 16 டிகிரி செல்சியசுக்கு கீழ் வெப்பம் பதிவான ஊர்களின் விவரங்களை காணலாம். தொட்டபெட்டா- ஊட்டி => 1.4, வால்பாறை => 6.5, ஊட்டி நகரம் => 7.6,

கொடநாடு => 8.3, ஜ.மரத்தூர்-ஜவ்வாது மலை => 9.1, கூடலூர்(நீலகிரி) => 9.3, குன்னூர் => 9.6, கொடைக்கானல் => 10.2, கல்வராயன்மலை(கள்ளக்குறிச்சி) => 10.6, கொல்லிமலை => 11, ஏற்காடு => 11, ஏலகிரிமலை => 11, சிறுமலை(திண்டுக்கல்) => 12, வத்தல்மலை(தருமபுரி) => 12, பச்சைமலை(திருச்சி) => 13, ஓசூர் => 10, கெலமங்கலம்(கிருஷ்ணகிரி) => 10.8, தளி(கிருஷ்ணகிரி) => 11.3, வேப்பனபள்ளி (கிருஷ்ணகிரி) => 11.9, நாற்றம்பள்ளி (திருப்பத்தூர்)=> 12, காரிமங்கலம்(தருமபுரி) => 12.8, கிருஷ்ணகிரி நகரம் => 13.4, பாப்பாரப்பட்டி(தருமபுரி) => 13.4, காவேரிப்பட்டினம்(கிருஷ்ணகிரி) =>13.6, பென்னாகரம்(தருமபுரி) => 13.6,

ஆலங்காயம்(திருப்பத்தூர்)=> 13.9, நல்லம்பள்ளி(தருமபுரி) => 14.2, பையூர்(கிருஷ்ணகிரி) => 14.9, பேரணாம்பட்டு(வேலூர்)=> 12.6, குடியாத்தம்(வேலூர்) => 12.8, மாதனூர்(திருப்பத்தூர்) => 13.5, ஜோலார்பேட்டை(திருப்பத்தூர்) => 13.6, காரமடை(கோவை) => 13.7, பள்ளிப்பட்டு(திருவள்ளூர்) => 13.8, வேலூர் விரிஞ்சிபுரம் => 13.9, கடமலைகுண்டு(தேனி) => 14.1, காடையம்பட்டி,சேலம் => 14.2, அன்னூர்(கோவை) => 14.3, கே.வி.குப்பம்(வேலூர்) => 14.4, சூலூர்(கோவை) => 14.4, பரமத்தி வேலூர்(நாமக்கல்) => 14.4, ஆத்தூர்(சேலம்) => 14.6, உப்பிலியாபுரம்(திருச்சி) => 14.6, கோவை மாநகரம் => 14.8, ஆனைமலை(கோவை) => 14.8, அவிநாசி(திருப்பூர்) => 14.9, அணைக்கட்டு(வேலூர்) => 15, பழனி(திண்டுக்கல்) => 15, போளூர்(தி.மலை) => 15.1, சென்னிமலை(ஈரோடு) => 15.2,

சேலம் மாநகரம் => 15.2, கணியம்பாடி(வேலூர்) => 15.3, கம்பம்(தேனி) => 15.3, சோளிங்கர்(இராணிப்பேட்டை) => 15.4, தொட்டியம்(திருச்சி) => 15.4, சின்னமனூர்(தேனி) => 15.5, தருமபுரி => 15.5, திருத்தணி => 15.6, தூ.நா.பாளையம்(ஈரோடு) => 15.6, குண்டடம்(திருப்பூர்) => 15.7, கிருஷ்ணராயபுரம்(கரூர்) => 15.7, கபிலர்மலை(நாமக்கல்) => 15.7, வேலூர் மாநகரம் கிழக்கு => 15.8, திருப்பத்தூர் PTO => 15.8, நிலக்கோட்டை(திண்டுக்கல்) => 15.8, திண்டுக்கல் மாநகரம் => 15.8, ஆண்டிபட்டி(தேனி) => 15.9, குடிமங்கலம்(திருப்பூர்) => 15.9, திருப்பூர் மாநகரம் => 15.9, சத்தியமங்கலம்(ஈரோடு)=> 15.9, நம்பியூர்(ஈரோடு) => 16, கீழ் பெண்ணாத்தூர்(தி.மலை) => 15.6, கரூர் பரமத்தி => 16, பேச்சிப்பாறை(கன்னியாகுமரி) => 16, திருவண்ணாமலை => 16.

இப்படி நடுங்கும் குளிரில் குளிர் ஒவ்வாமை நோய் உள்ளவர்கள், முதியவர்கள், எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், உடலில் தாங்கும் திறன் இல்லாதவர்கள், பல்வேறு நோய் தொல்லைகள் உள்ளவர்கள் என பலரும் உயிரிழந்து வருகின்றனர். வழக்கமான குளிர்காலங்களை விட தற்போதைய குளிர்காலங்களில் தினசரி இறப்பு விகிதம் சிறிதளவு உயர்ந்துள்ளது என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!