இன்று தேனி வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்

இன்று தேனி வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்
X

முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தேனிக்கு வருகிறார். நாளை தேனியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

இன்று மாலை 4.05 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கு கட்சி நிர்வாகிகளை சந்தித்து விட்டு, இரவு 7.20 மணிக்கு வைகை அணையில் உள்ள அரசு பயணியர் விடுதிக்கு வருகிறார். அங்கு இரவு தங்கும் ஸ்டாலின், நாளை காலை தேனி பைபாஸ் ரோட்டில் அன்னஞ்சி விலக்கு அருகே நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

மதியம் 12 மணிக்குள் விழாவை முடித்துக் கொண்டு திண்டுக்கல் புறப்பட்டுச் செல்கிறார். இடையில் முதல்வருக்கு இடையே உள்ள நேரத்தை பொறுத்து அவர், தேனி ஆவீன் டீக்கடை, உழவர்சந்தை, தென்றல்நகர் நரிக்குறவர் காலனிக்கு சென்று சிறிது நேரம் ஆய்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தவிர மற்ற நிகழ்ச்சிகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story