ஈபிஎஸ்-ஓபிஎஸ் பிரச்சனைக்கு டெல்லியில் பேச்சுவார்த்தை
பைல் படம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், செங்கல்பட்டு மத்திய மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் பங்கேற்றார்.
பொதுக்ககூட்டத்தில் பேசிய அவர், "ஏழை, எளிய மக்களுக்காக வாழ்ந்தவர், ஏழை, எளிய மக்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். இன்று புரட்சி தலைவரை பற்றி தெரியாதவர்கள் மேடையில் பேசி வருகின்றனர். தமிழகத் தில் மூன்று முறை தொடர்ந்து ஆட்சி செய்தவர் எம்.ஜிஆர். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே நடந்து வரும் சண்டைக்கு டெல்லியில் சமரசப் பேச்சு நடைபெற்று வருகின்றது.
எடப்பாடி பழனிசாமியை விட துரோகி இந்த உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது. எடப்பாடி பழனிசாமி மீது எத்தனை குற்றச்சாட்டு உள்ளது என்பது அனைவருக்கு தெரியும். ஒரு பொதுக்குழு கூட்டம் நடத்த பல கோடி ரூபாய் செலவு செய்தவர் எடப்பாடி. இருவரும் சுயநலத்தால் பதவி வெறியால் பணம் இருக்கும் திமிரால் சுற்றி திரிகின்றனர். அதிமுக தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி இன்று குண்டர்கள் கையில், டெண்டர் பார்ட்டிகள் கையில் சிக்கியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் என்ன செய்ய போகின்றார்கள் என பார்க்கலாம். பொதுக்குழுவை கூட்டி பன்னீர் செல்வத்தை விரட்டி அடித்து இடைக்கால பொதுச்செயலாளராக அறிவித்து, இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இடைத்தேர்தலில் அமுமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்றார் டிடிவி. தினகரன்.
அ.ம.மு.க.வும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி விட்டதால், எடப்பாடி அணியுடன், தினகரன் அணி சேரலாம் என்ற பேச்சு வார்த்தை மற்றும் யூகங்களுக்கு முழு அளவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவர்களை சேர்த்து வைக்க பா.ஜ.க எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளது என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu