இல்லம் தேடிக் கல்விக்கும் கோடை விடுமுறை!
பைல் படம்
தமிழகத்தில் அத்தனை பள்ளிகளுக்கும் ஏப்., 28ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 1 ம் தேதியும், முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. இந்நிலையில் இல்லம் தேடிக் கல்விக்கும் விடுமுறை வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்த கோரிக்கையினை அரசு ஏற்று இல்லம் தேடிக்கல்விக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.
இது குறித்து இல்லம் தேடிக் கல்விக்கான ஐ.ஏ.எஸ்., அதிகாரி இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கோடை விடுமுறை காலத்தில் விருப்பப்படும் குழந்தைகள் மற்றும் தன்னார்வலர்கள் மையங்களுக்கு வருகை புரிந்து படிக்கலாம். பொது நூலகங்களில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தவும் மாணவர்களின் தனித்திறனை வளர்க்கவும் இந்த விடுமுறையைப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கான கோடைகால பயிற்சி முகாம்கள் அருகில் உள்ள பொது நூலகங்களில் நடைபெறுகின்றன. அங்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். நூலகங்களில் குழந்தைகளை உறுப்பினர்களாக சேர்த்து நூலகங்களிலிருந்து நூல்களை எடுத்துச் செல்லும் பழக்கத்தை ஊக்கப்படுத்துங்கள்.
இக்கோடை விடுமுறை காலத்தில் தன்னார்வலர்கள் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஊக்கப்படுத்த வேண்டும். மாணவர் சேர்க்கை குறித்த பதிவை இல்லம் தேடிக் கல்வி மொபைல் செயலியில் தவறாது பதிவு செய்ய வேண்டும். அதிக குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் தன்னார்வலர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்!. இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu