கம்பம் அருகே கேரளாவிற்கு கடத்தப்பட இருந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்

கம்பம் அருகே கேரளாவிற்கு கடத்தப்பட இருந்த   10 கிலோ கஞ்சா பறிமுதல்
X
ஆந்திராவில் இருந்து கம்பம் வழியாக கேரளாவிற்கு கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், 4 பேரை கைது செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து கம்பத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த் தலைமையில் போலீசார் கம்பம் கோம்பை ரோடு தெருவில் ரோந்து சென்றனர். அப்போது நாககன்னிஅம்மன் கோயில் அருகே சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் சாக்குப்பையுடன் நின்றிருந்த 4 பேரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையில் 10 கிலோ கஞ்சா இருந்தது.

பின்னர் அதனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், கோம்பைரோடு தெருவை சேர்ந்த ருத்ரன் (வயது 26), ஞானேசன் (44), அலெக்ஸ் பாண்டியன் (24), நெல்லு குத்தி புளியமரம் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் (48) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனா். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!