ஓபிஎஸ்-ஐ சந்தித்த அதிமுக சீனியர் ! பின்னணியில் பா.ஜ.க. உள்ளதா?

ஓபிஎஸ்-ஐ சந்தித்த அதிமுக சீனியர் !   பின்னணியில் பா.ஜ.க. உள்ளதா?
X

பைல் படம்

அதிமுகவின் சீனியர் தலைவர் ஒருவர் ஓ பன்னீர்செல்வதை சந்தித்தது பாஜகவின் பின்னணியாக தான் இருக்கும்.

பாஜகவுடன் இனி கூட்டணியில்லை என அதிமுக உறுதிபட கூறிவிட்டதை அடுத்து அதிமுகவுடன் பாஜக தலைமை சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் ஆனால் தங்கள் முடிவில் உறுதியாக இருப்பதாக அதிமுக கூறியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக அதிமுகவை உடைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக அதிமுக சீனியர் தலைவரிடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த சீனியர் தலைவர் சமீபத்தில் ரகசியமாக ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்ததாகவும் அடுத்து ஒரு சில நாட்களில் சில திடீர் திருப்பங்கள் அதிமுகவில் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் எந்த சதித் திட்டம் தீட்டினாலும் தொண்டர்களும் கட்சியும் தான் பக்கம் இருப்பதால் தனக்கு கவலை இல்லை என எடப்பாடி பழனிச்சாமி தைரியமாக இருக்கிறார். இருப்பினும் பா.ஜ.க. வகுத்துள்ள வியூகம் என்ன? அதனை முறியடிப்பது எப்படி? தனது கட்சி தலைமையையும், இரட்டை இலையையும் மீண்டும் தக்க வைப்பது எப்படி என்பது குறித்து எடப்பாடி பழனிச்சாமி மிகவும் தெளிவாக முடிவு எடுத்து விட்டு, தனது முடிவுக்கு முக்கிய அ.தி.மு.க., தலைவர்கள் அத்தனை பேரிடமும் ஒப்புதல் பெற்று விட்டே, கூட்டணியை முறித்தாராம். எனவே பா.ஜ.க. நடத்தும் உடைப்பு முயற்சி பெரிய அளவில் வெற்றியை தராது என அ.தி.மு.க.,வினர் திடமாக கூறி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!