"பஸ் ஓடிய ரோட்டில், டூவீலர் செல்ல வழியில்லை" -தேனியில் ஆக்கிரமிப்பு அட்டகாசம்!!

பஸ் ஓடிய ரோட்டில், டூவீலர் செல்ல வழியில்லை  -தேனியில் ஆக்கிரமிப்பு அட்டகாசம்!!
X
தேனியில் பஸ்கள் சென்று வந்து கொண்டிருந்த ரோட்டில், இன்று டூ வீலர்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு கடும் நெரிசல் நிலவுகிறது. ரோடுகளை முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர்.

தேனியில் ஒரு காலத்தில் பஸ்கள் சென்று வந்து கொண்டிருந்த ரோட்டில் இன்று டூ வீலர்களில் கூட செல்ல முடியாத அளவுக்கு கடும் நெரிசல் நிலவுகிறது. அந்த அளவுக்கு ரோடுகளை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்.

தேனியில் எடமால் தெரு, பகவதியம்மன் கோயில் தெருக்கள் மிகவும் முக்கியமானவை. முழுக்க வர்த்தக நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள இந்த ரோடுகளில் மக்கள் நடமாட்டமும் அதிக எண்ணிக்கையில் இருக்கும். இந்த ரோடுகளில் பள்ளிப்பேருந்துகள் சென்று வந்து கொண்டிருந்தன. அந்த அளவுக்கு இந்த ரோடுகள் அகலமானதாக இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக கடை வாசல்கள் ரோட்டுக்கு வந்தது, ரோடு மறைந்து தெருவானது.. தெரு மறைந்து சந்து ஆகிவிட்டது. அந்த அளவிற்கு இந்த ரோட்டை ஆக்கிரமிப்புகள் மறைத்துவிட்டன. ரோட்டை ஆக்கிரமித்து இருபுறமும் கான்கிரீட் கட்டடம் கட்டி விட்டனர். தவிர சாலையோர கடைகளும் நுாற்றுக்கணக்கில் உருவாகி விட்டன. இதன் விளைவு இந்த ரோடுகளில் தற்போது டூ வீலர்களில் கூட செல்ல முடியவில்லை. நடந்து தான் செல்ல வேண்டும். நடந்து செல்லும் போது கூட நெரிசல் இருக்கும் அளவுக்கு ரோடு குறுகி விட்டது. அதிகளவு கூட்டமும் வந்து செல்கிறது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண ரோட்டோரங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளையாவது அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தேனி நகராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Tags

Next Story
பொங்கல் பண்டிகை முடிவில் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூ.30..!