மின் வேலி அமைக்க கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்: அரசு உத்தரவு

மின் வேலி அமைக்க   கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்: அரசு உத்தரவு
X

மிண்வேலி பைல் படம்

வன விலங்குகளை மின் விபத்தில் இருந்து பாதுகாக்க, மின்வேலிகள் பதிவு மற்றும் ஒழுங்குமுறை விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

வனவிலங்குகளை ஒட்டியுள்ள விளைநிலங்களில் விவசாயிகள் மின்வேலிகளை அமைத்து வருகின்றனர். இந்த மின்வேலிகளில் சிக்கி பல நேரங்களில் வனவிலங்குகள் உயிரிழந்து விடுகின்றன. இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வனவிலங்குகள் உயிரிழப்பதை தடுக்க தமிழக அரசு புதிய விதிமுறைகளை உருவாக்கி உள்ளது. இதன்படி மின் வேலிகள் அமைக்க, முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், 'தமிழ்நாடு மின்வேலிகள் பதிவு மற்றும் ஒழுங்குமுறை விதிகள் - 2023' வகுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது சூரிய சக்தி மின்வேலிகள் உள்ளிட்ட மின் வேலிகள் அமைப்பதையும், விவசாய நிலங்களைச் சுற்றி, ஏற்கெனவே அமைக்கப்பட்ட மின் வேலிகளை பதிவு செய்வதை தரப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் வழிவகுக்கும்.

விதிகளின் முக்கிய அம்சங்கள்:

சூரிய சக்தி மின்வேலிகள் உள்ளிட்ட மின் வேலிகள் அமைக்க, முன் அனுமதி பெறுவது கட்டாயம். ஏற்கனவே அமைக்கப்பட்ட மின் வேலிகளை பதிவு செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்விதிகள், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட, காப்புக் காடுகளில் இருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள, விவசாய நிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். மின் வேலிகளை அமைக்கும் வணிகத்தில் உள்ள, அனைத்து நிறுவன மின் வேலிகளும், இவ்விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள, விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story