தேனியில் விபத்தை தடுக்க இரவில் ஒளிரும் பட்டைகள் கொண்ட தடுப்புகள்

தேனியில் விபத்தை தடுக்க இரவில் ஒளிரும் பட்டைகள் கொண்ட தடுப்புகள்
X

சாலை தடுப்புகளில் ஒட்டப்பட்டுள்ள ஒளிரும் பட்டை. 

தேனியில், விபத்தை தடுக்க இரவில் ஒளிரும் பட்டைகள் அடங்கிய கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தேனியில் கம்பம் ரோடு, மதுரை ரோடு, பெரியகுளம் ரோடுகளில் மைய தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இரவில் வரும் வாகனங்கள் அடிக்கடி தடுப்புச்சுவரில் மோதி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்க, தேனி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தட்ஷிணாமூர்த்தி தலைமையிலான குழுவினர், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

பெரியகுளம், கம்பம், மதுரை ரோடுகளில் முக்கிய இடங்களில் விபத்துகளை தடுக்க இரவில் ஒளிரும் பட்டைகள் ஒட்டப்பட்ட கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அரண்மனைப்புதுார் விலக்கு சந்திப்பில், அதிகளவு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நகர் பகுதி முழுவதும் இந்த தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் இரவுநேர விபத்துக்கள் குறையும் என இன்ஸ்பெக்டர் தட்ஷிணாமூர்த்தி நம்பிக்கை தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture