கேரள அரசை கண்டித்து குமுளியில் மறியல்
கண்ணகி கோயில் விழாவிற்கு தமிழக நிருபர்களை அனுமதிக்காத கேரளாவினை கண்டித்து குமுளியில் மறியல் நடந்தது.
நேற்று கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சென்ற தமிழக பத்திரிக்கை நிருபர்களை கேமராவுடன் வரக்கூடாது. செய்தி, படம் எடுக்க கூடாது. கேமரா எடுக்காமல் சாமி கும்பிட மட்டுமே வர வேண்டும் என கேரள அதிகாரிகள் கெடுபிடி செய்தனர்.
இதனை கண்டித்து தமிழக பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல் செய்தும், தமிழக அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனை ஐந்து மாவட்ட விவசாயிகள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கண்ணகி கோயில் முழுக்க தமிழகத்திற்கு சொந்தமானது. தமிழக வனப்பகுதிக்குள் உள்ளது. அதற்கான பாதை மட்டுமே கேரளாவில் உள்ளது. இந்த பாதை வழியாக பக்தர்கள், செய்தியாளர்கள் செல்வதில் கேரளாவிற்கு என்ன பிரச்னை? அவர்கள் ஏன் நிருபர்களை தடுக்கின்றனர். மக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். இது மிகவும் தவறான செயல். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.
இந்நிலையில் கேரள அரசின் நடவடிக்கைகளை கண்டித்து ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகளும், பா.ஜ., கட்சியினரும் குமுளியில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இவர்களை சமரசம் செய்த தமிழக அதிகாரிகள் கேரளாவுடன் பேச்சுவார்த்தைக்கு கூட முன்வரவில்லை என்பது வேதனையான விஷயமாக இருந்தது என விவசாயிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu