ஆச்சர்யங்களை குவிக்கும் ராஜேந்திரசோழனின் வரலாறு
பைல் படம்
இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் ராஜேந்திர சோழர் மட்டுமே. தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர். 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர். அவரது போர்ப்படையில் 60,000 யானைகளும், 5 லட்சம் குதிரைகளும் இருந்ததாக செப்பேடுகள் கூறுகின்றன.
இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும் ஆகும் தீவன செலவு 200 ரூபாய். பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய். ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய். ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் பால், தயிர் , வெண்ணை, நெய் போன்றவற்றால் லாபம் ஈட்ட முடியும்.
ஆனால் எந்த லாபத்தையும் வழங்காத 60,000 யானைகளையும் 5 லட்சம் குதிரைகளையும், ராஜேந்திர சோழன் பராமரிப்பது எதற்காக ??? போர் புரிவதற்காக மட்டும்தான் !!! யானைப்படை மற்றும் குதிரைப் படையே இலட்சக் கணக்கில் வைத்திருந்தவனின், காலாட் படை எவ்வளவு இருந்திருக்க வேண்டும்??
தனது பதினேழாம் வயதில், இளவரசனாக இருந்து ராஜேந்திர சோழன் வென்ற போரில் அவனுடன் இருந்த வீரர்களின் எண்ணிக்கை 90,000. 1016ம் ஆண்டுக்கு பிறகு சோழர் படை முழுவதும் அவன் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. சுமார் 20 லட்சம் வீரர்கள் அவன் படையில் இருந்தனர். தன் சேனை முழுவதற்கும் நாளொன்றுக்கு ஆகும் சாப்பாட்டு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? பராமரிப்பு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? நிச்சயம் கோடிக்கணக்கில் இருந்திருக்கும்.
அத்துணை பேருக்கும் உணவு வழங்குவதற்கு, அவன் நாட்டை எவ்வளவு செழிப்பாக வைத்திருந்திருப்பான் என்பதை கற்பனை செய்யுங்கள்.... மாதக் கணக்கில் வீரர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும் அதற்கான உணவை கையில் எடுத்துச் சென்றிருப்பார்கள் அல்லவா?. தஞ்சை டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தில் உயர்ந்து நின்றதற்கு இராஜேந்திர சோழனே முதன் முதற் காரணம்.
எதிரிகள் தன் நாட்டைத் தாக்கி அழிக்க நேரிட்டால், தஞ்சையின் நெற்களஞ்சியங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்ற ஒரே காரணத்திற்காக தனது தந்தை ராஜ ராஜ சோழன் ஆட்சி செய்த தஞ்சை மண்ணிலிருந்து ஜெயங்கொண்ட சோழ புரத்திற்கு தனது தலைமை இடத்தை மாற்றினான் ராஜேந்திரசோழன். உழவர்களின் மேல் அவ்வளவு வாஞ்சை !!! ராஜேந்திர சோழன் தன் படைகள் ஓய்வு எடுப்பதற்காக காடுகளை வெட்டி சீர் படுத்தினான் என்பதற்கு இன்றைய அரியலூர் மாவட்டத்தில் உள்ள "படை நிலை காடுவெட்டி" என்ற ஊரே சாட்சியம்.
ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு நாட்டை, பத்தாயிரம் போர் கப்பலுடன் வெற்றி பெற்றான் என்பது நம் கற்பனைக்கு எட்டாதவை... இந்தியாவை பிடிப்பதற்கு கூட பிரிட்டிஷ், பிரஞ்ச் அரசுகள் அவ்வளவு கப்பலில் வந்ததாகத் தெரியவில்லை. ஒரு நாட்டைப் பிடிக்க 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் ஆகும் என்பதும், அத்தனை நாட்கள் தனது யானைகள், குதிரைகள், காலாட் படை வீரர்களுக்கான உணவை தன்னுடன் எடுத்துச் சென்றான் என்றால் அவனின் உணவு தானிய உற்பத்தி எவ்வளவு இருந்திருக்க வேண்டும் ???
உப்பு நீர் சூழ்ந்த கடல்களின் இடையே, லட்சக் கணக்கான வீரர்களுக்கும் குதிரைகளுக்கும் மாதக்கணக்கில் தூய்மையான குடிநீரை எவ்வாறு அவன் வழங்கியிருக்க முடியும்?? அசுத்தமான குடிநீரால் அந்த காலத்திலும் காலரா பரவியது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.. அப்படியானால், கடல் நீரை சுத்தப்படுத்தும் அறிவியலை அறிந்தவனா அவன்??
போரில் அடிபட்ட வீரர்களின் காயங்களை ஆற்றுவதற்கு எத்தனை ஆயிரம் மருத்துவர்கள் அவனுடன் சென்று இருக்க வேண்டும்?? மருத்துவத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற குழுவை அவன் பெற்றிருக்கவில்லை என்றால் 60 ஆண்டுகளாக தொடர் வெற்றி பெற்றிருக்க முடியுமா???
தற்போதைய இந்தோனேஷியா, மலேசியா, சீனா, கம்போடியா, இலங்கை போன்ற நாடுகளை கப்பல் படையால் வென்றெடுத்த மாவீரன் அவன்... அதுவும் குறிப்பாக ஸ்ரீவிஜய நாடு பெரும் வணிக நாடாக விளங்கியது.. உலகிலுள்ள பல வணிகர்களும் அங்கு வந்து போவது வழக்கம். நாட்டின் பொருளாதாரமான வணிகத்தை காப்பாற்ற எப்பேர்ப்பட்ட போர்வீரர்கள் அவசியம்?? அப்படிப்பட்ட சிறந்த போர்வீரர்களை துவம்சம் செய்து பல நாட்டு வணிகத்தை கைப்பற்றியவன் ராஜேந்திர சோழன்.
தமிழக வாணிப செட்டியார்கள், அவன் காலத்தில் தான் உலகம் முழுவதும் பயணம் செய்து பெரும்பணம் ஈட்டினர். நமது அறிவுசார் காப்பியங்களான, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சிவபுராணம், திருக்குறள், மன்னரின் நூல்கள் உள்ளிட்ட பலவற்றையும் பாடசாலைகள் அமைத்து அதன் மூலம் பாதுகாத்தவன் அவன்.
முக்கியமாக, பல்வேறு பொழுது போக்குகள் இருக்கும் இந்த நவயுக காலத்திலேயே நமக்குள் தேவை இல்லாத ஜாதி சண்டைகள் வருகிறது. ஆனால் அந்த காலத்தில் பல ஜாதி பிரிவை உள்ளடக்கிய லட்சக்கணக்கான போர் வீரர்கள் இடையே எந்தவித ஜாதி சண்டையும் வந்ததாக எந்த ஒரு வரலாற்று ஏடுகளும் கூறவில்லை. ஆம், சமூக நீதியின் படி செம்மையான ஆட்சிபுரிந்த சக்கரவர்த்தி அவன். தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் அவன் ஒருவனே! மாமன்னன் ராஜேந்திர சோழன்...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu