சோறு மட்டும் போடுங்க...வேலை செய்யறேன் என நடித்து திருடிய நபரை தேடும் போலீஸார்

சோறு மட்டும் போடுங்க...வேலை செய்யறேன்  என நடித்து  திருடிய நபரை தேடும் போலீஸார்
X
தான் ஒரு அனாதை என ஏமாற்றி வேலைக்கு சேர்ந்த இடங்களில் திருடிச் சென்ற கில்லாடி வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்

'ஐயா, நான் அனாதை... எனக்கு சோறு மட்டும் போடுங்க... வாழ்நாள் முழுவதும் வேலை செய்யிறேன்' என வீட்டில் தங்கி பணம், நகை மற்றும் டூ வீலரை திருடிச்சென்ற கில்லாடியை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம், வருசநாடு அருகே வாலிப்பாறையை சேர்ந்தவர் வனம்( 48.) இவரது வீட்டிற்கு சந்தோஷ்குமார் என்ற 18 வயது நபர் கடந்த வாரம் வந்து, தான் ஒரு அனாதை என்றும், தனக்கென யாருமில்லை எனக்கூறி வேலை தருமாறு வனத்திடம் கேட்டுள்ளர். சம்பளம் எதுவும் வேண்டாம். சோறு போட்டு தங்க இடம் கொடுத்தால் போதும் எனக் கூறியுள்ளார்.

சிறுவனின் நிலை கண்டு மனம் இறங்கிய வனம், தனது வீட்டில் தங்க வைத்து சோறு போட்டு வளர்த்துள்ளார். ஒரு வாரம் தங்கி சொன்னபடி வேலை செய்த சந்தோஷ்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஏழரை பவுன் நகை, ஆயிரத்து எழுநுாறு ரூபாய் பணம், ஒரு டூ வீலரை எடுத்துக் கொண்டு தலை மறைவாகி விட்டார்.

பொருட்களை திருடிச்சென்ற சந்தோஷ்குமார் காணாமல் போனதை உறுதி செய்த வனம், இது தொடர்பாக வருசநாடு போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சந்தோஷ்குமார் இதேபோல் திண்டுக்கல், மதுரை அவனியாபுரம் பகுதிகளிலும் கை வரிசை காட்டி அங்கெல்லாம் திருட்டு வழக்கு பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. தற்போது வருசநாடு போலீசாரும் சந்தோஷ்குமாரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story