நகராட்சி முன்னாள் தலைவரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்த போலி அதிகாரி

நகராட்சி முன்னாள் தலைவரிடம்  ரூ.20 லட்சம் மோசடி செய்த போலி அதிகாரி
X
கூடலுார் நகராட்சி முன்னாள் தலைவர் சின்னமாயனிடம் ரூ. 20 லட்சம் மோசடி செய்த போலி அதிகாரி மீது போலீஸார் வழக்கு பதிவு

கூடலுார் நகராட்சி முன்னாள் தலைவர் சின்னமாயன்(58.). இவர் தற்போது கூடலுார் கூட்டுறவு பண்டகசாலை தலைவராக இருந்து வருகிறார். இவரது மகனுக்கு மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கித்தருவதாக கூறி, சின்னமனுாரை சேர்ந்த சந்தனம் என்பவர் 20 லட்சம் ரூபாய் வாங்கினார். ஆனால் சொன்னபடி வேலையும் வாங்கித்தரவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லையாம். இந்நிலையில், சந்தனம் தான் சின்னமனுார் மின்வாரியத்தில் அதிகாரியாக வேலை பார்ப்பதாக கூறியது பொய் என்பதும் தெரியவந்தது. அதிகாரி எனக்கூறி வேலை வாங்கித்தருவதாக 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த சந்தனம் மீதுஸ சின்னமாயன் கூடலுார் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!