பெரியாறுஅணை பாதுகாப்பு கட்டுப்பாடு அதிகாரம்:தேனி கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும்
கேரள அரசை கண்டித்து பென்னிக்குவிக் மணி மண்டபம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் முழுமையாக தேனி கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்களே அணையினை கைப்பற்றும் நிலை வரும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
கேரள அரசு தன்னிச்சையாக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து கேரளா வழியாக கடலுக்கு திறந்து விட்டுள்ளது. தற்போது விநாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடிக்கும் அதிக தண்ணீர் கேரளாவுக்கு செல்கிறது. கேரள அரசை கண்டித்து ஐந்து மாவட்ட விவசாயிகள் இன்று குமுளி எல்லையில் பென்னிக்குவிக் மணி மண்டபம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பின்னர் விவசாயிகள் கூறியதாவது: முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு, கட்டுப்பாடு, உரிமை அனைத்தையும் தேனி கலெக்டரிடம் வழங்க வேண்டும். அணை பொறியாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில்,தமிழக போலீசாரை பாதுகாப்பிற்கு நியமிக்க வேண்டும். கேரளா சார்பாக யாரும் அணைக்குள் வராதபடி தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
'ரூல்கர்வ்' முறை பின்பற்றப்படுவதை உத்தமபாளையம் ஆர்.டி.ஒ., கண்காணிக்க வேண்டும். முல்லை பெரியாறு அணையினை கண்காணிக்க ஐந்து மாவட்ட விவசாயிகளை கொண்ட கண்காணிப்புக்குழு அமைக்கப்பட வேண்டும். வாரந்தோறும் முல்லை பெரியாறு அணைக்கு தேனி கலெக்டர் சென்று ஆய்வு நடத்த வேண்டும். கேரளாவின் அத்தமீறல்களை தமிழக அரசுக்கு, தேனி கலெக்டர் நேரடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினர். இந்த கோரிக்கைகளை வலியறுத்தி கலெக்டர் முரளீதரனிடம் மனுவாகவும் கொடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu