135 அடியை எட்டியது பெரியாறு அணை: வைகை அணை இன்று திறப்பு

135 அடியை எட்டியது பெரியாறு அணை: வைகை அணை இன்று திறப்பு
X

வைகை அணை நீர் மட்டம் இன்று திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் முல்லை பெரியாறு அணை 135 அடியை தொட்டது. வைகை அணை நீர் மட்டம் 70 அடியை தொட்டதால் இன்று திறக்கப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிபட்டியில் 2.6 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 0.2 மி.மீ., போடியில் 3.2 மி.மீ., கூடலுாரில் 2.2 மி.மீ., மஞ்சளாறில் ஒரு மி.மீ., பெரியகுளத்தில் 45 மி.மீ., பெரியாறு அணையில் 14.6 மி.மீ., தேக்கடியில் 9.6 மி.மீ., சோத்துப்பாறையில் 4 மி.மீ., உத்தமபாளையத்தில் 8.3 மி.மீ., வைகை அணையில் 3.2 மி.மீ., வீரபாண்டியில் 6 மி.மீ., மழை பதிவானது.

இந்நிலையில் தேனி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 134.88 அடியை எட்டி உள்ளது. விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளதால், இன்று மதியம் அணை நீர் மட்டம் 135 அடியை தொட்டு விடும். வைகை அணை நீர் மட்டம் 69.88 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் வருவதால் இன்று நீர் மட்டம் 70 அடியை தொட்டதும், அணைக்கு வரும் நீர் முழுக்க வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

மஞ்சளாறு அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், சோத்துப்பாறை அணையும் இன்று திறக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!