வாட்ச்மேனை அரிவாளால் மிரட்டிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

வாட்ச்மேனை அரிவாளால் மிரட்டிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
X

வாட்ச்மேனை அரிவாளால் மிரட்டிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய வாட்ச்மேனை அரிவாளால் மிரட்டியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாட்ச்மேனாக பணிபுரிபவர் மொக்கை. இவர் பணியில் இருக்கும் போது ராமர்கோயில் தெருவை சேர்ந்த ரிசாத் ராஜ் என்பவர் உடம்பில் சிராய்ப்பு காயங்களுடன் சிகிச்சைக்கு வந்தார்.

அங்கு பணியில் இருந்த டாக்டர் ஊசி போட்டு காயத்திற்கு மருந்து தடவி, மாத்திரை எழுதிக் கொடுத்து அனுப்பினர். வெளியே வந்த ரிசாத்ராஜ், வாட்ச்மேன் மொக்கையுடன் தகராறு செய்து, அவரை அரிவாளால் வெட்ட முயன்றார்.

சம்பவம் தொடர்பாக மொக்கை தேவதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் ரிசாத்ராஜை கைது செய்தனர். மதுரை மத்தியில் சிறையில் அடைக்கப்பட்ட அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு, தேனி எஸ்.பி., பிரவீன் உமேஷ்டோங்கரே கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.

ரிசாத்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டதன் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!