தென்மேற்கு பருவமழை வலுவடையாத நிலையில் தமிழகத்துக்கு கைகொடுக்குமா மழை ?

Today Rain News in Tamilnadu in Tamil - வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு மே 20ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் என்ற அறிவிப்பு வெளியானது. அதற்கேற்ப மே 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை ஆங்காங்கே லேசான மழைப்பொழிவு இருந்தது. தென்மேற்கு பருவமழை மே 27ல் கேரளாவில் தொடங்கி விடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த அறிவிப்பு வந்ததில் இருந்து இதுவரை மழையில்லை.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: வழக்கமாக மே மாதம் மழை இருக்காது. ஜூன் முதல் வாரத்திற்கு மேல் மழை தொடங்கும். அப்போதெல்லாம் மழைப்பொழிவு நன்றாக இருக்கும். எங்கள் அனுபவத்தில் நாங்கள் பார்த்தவரை மே மாதம் மழை தொடங்கினால் அந்த ஆண்டு வறட்சியான ஆண்டாகவே இருந்து வந்துள்ளது. இந்த ஆண்டும் மே மாதம் மழை தொடங்கியது. அதன் பின்னர் தற்போது வரை மழையில்லை ஜூன் இரண்டாவது மூன்றாவது வாரங்களில் கடுமையானம மழைப்பொழிவு இருக்கும். இந்த ஆண்டு மேக மூட்டமும், லேசான சாரலும் மட்டுமே இருந்து வருகிறது.
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை குறித்து வெதர்மேன்களும், வானிலை ஆய்வு மையமும் எந்த ஒரு உத்தரவாதமும் தரவில்லை. இதனால் நாற்றாங்கால் பாவிய விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மானாவாரி விவசாயிகளும் நிலங்களை உழுது போட்டதோடு, விதைப்பிற்காக மழை வருமா என காத்துக் கொண்டுள்ளனர். ஆனி மாதம் பிறந்து விட்ட நிலையில், ஆடி மாதம் விதைப்பு சீசன். இன்னும் மழை பொழிவும் இல்லை. மழை பற்றிய தகவலும் இல்லை. எனவே விவசாயிகள் வானத்தை பார்த்து ஏங்கிக் கொண்டு உள்ளனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu