பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டங்கள் எது? மத்திய அரசு தகவல்

பள்ளிக் கல்வியில் சிறந்து விளங்கும் மாவட்டங்கள் எது? மத்திய அரசு தகவல்
X
Central Government News- Performance Grading Index for Districts school

Central Government News- 2019-20ம் கல்வியாண்டின் மாவட்டங்களுக்கான செயல்திறன் தரப்படுத்தல் குறியீட்டில் தமிழகத்தில் கன்னியாகுமரி, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

முன்னதாக, 2018-19 மற்றும் 2019-20-ன் மாவட்டங்களுக்கான செயல்திறன் தரப்படுத்தல் குறியீட்டை (Performance Grading Index for Districts - PGI-D) மத்திய அரசு வெளியிட்டது.கற்றல் மதிப்பீடுகள் (Outcome), வகுப்பறை அனுபவம் (Effective Classroom transaction), உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் ( Infrastructure, Facilities, Student Entitlements), பள்ளிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு (School Safety and Child Protection), இணைய வழி கற்றல் (DIgital Learning), ஆளுகை செயல்முறை (Governance) உள்ளிட்டவைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை 83 பிரிவுகளின் கீழ் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், ஒட்டுமொத்த மதிப்பெண் அல்லது அந்தந்த பிரிவுகளில் அதிகபட்சமாக 90% புள்ளிகளை பெறும் மாவட்டங்கள் 'Daksh' என்ற உயரிய மதிப்பீட்டதாகவும், குறைந்தபட்சமாக 10% புள்ளிகள் வரை பெறும் மாவட்டங்கள் Akanshi-3 என்ற குறைய மதிப்பீட்டைக் கொண்டதாகவும் வகைப்படுத்தப்படுகின்றன.

2018-19-ல், தமிழfத்தைப் பொறுத்த வரையில், அதிகபட்சமாக தருமபுரி, விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்கள் 71-80% மதிப்பீட்டிலும், குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரி, அரியலூர், திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் 51-60% மதிப்பீட்டிலும், இதர அனைத்து மாவட்டங்களும் 61-70% என்ற மதிப்பீட்டிலும் இடம் பெற்றன.இந்த மாவட்டங்களின் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அளவிடும் விதமாக 2019-20ன் தரப்படுத்தல் குறியீட்டும் வெளியிடப்பட்டுள்ளது.

தரப்படுத்தப்பட்ட இரு ஆண்டுகளில், 2019-20ல் சில மாவட்டங்கள் தங்களது தர நிலையில் பின்னடைவை சந்தித்தது தெரியவந்துள்ளது. உதாரணமாக, 71-80% என்ற மதிப்பீட்டில் ஒரு மாவட்டம் கூட இடம்பெறவில்லை. 2018-ல் அந்த மதிப்பீட்டில் இருந்த தருமபுரி, விழுப்புரம் தரநிலையில் பின்னோக்கி 61-70% மதிப்பீட்டில் இதன் பெற்றுள்ளன. அதேபோன்று, 51-60% மதிப்பீட்டில் இருந்து அரியலூர் 2019-20ல் 41-50% வரம்புக்குள் வந்துள்ளது.இரண்டு கல்வியாண்டுகளிலும், ஒட்டுமொத்த குறியீட்டு மதிப்பெண்ணில் எந்தவொரு மாவட்டமும் 80 அல்லது அதற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil