மனநோயாளியை வீடியோ எடுத்து வெளியிட்ட இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

மனநோயாளியை வீடியோ எடுத்து வெளியிட்ட இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
X

பைல் படம்.

தேனியில் மனநோயாளியிடம் விசாரணை நடத்தும் போது வீடியோ எடுத்து வெளியிட்ட இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

தேனி பழனிசெட்டிபட்டியில் மனநோயாளி ஒருவரை இன்ஸ்பெக்டர் மதனகலா விசாரித்தார். அந்த விசாரணையின் போது மனநோயாளி தத்துவங்கள் பேசி கவிதை வாசித்தார்.

இதனை வீடியோ எடுத்த இன்ஸ்பெக்டர் மதனகலா, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதற்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே இன்ஸ்பெக்டர் மதன கலாவை ஆயுதப் படைக்கு. மாற்றி உத்தரவிட்டார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்