தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் இலவச தைராய்டு பரிசோதனை முகாம்

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில்  இலவச தைராய்டு பரிசோதனை முகாம்
X

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் நடந்த இலவச தைராய்டு மருத்துவ முகாமில் டாக்டர் ஒருவர்,  நோயாளியை பரிசோதிக்கிறார்.

தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் இன்று நடைபெற்ற இலவச தைராய்டு மருத்துவ பரிசோதனை முகாமில் 245 பேர் பங்கேற்று மருத்துவ ஆலோசனை பெறறனர்.

தேனியில், நட்டாத்தி நாடார் மருத்துவமனை மற்றும் கருத்தரித்தல் மையம், 75 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இன்று இந்த மருத்துவமனையில், இலவச தைராய்டு பரிசோதனை முகாம் நடைபெற்றது. அகச்சுரப்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.முத்துக்குமார், நோயாளிகளை பரிசோதித்து இலவச ஆலோசனைகள் வழங்கினார்.

காலை 10 மணி முதல், மாலை 4 மணி வரை நடைபெற்ற பரிசோதனையில் 245 பேர் பங்கேற்று டாக்டர் ஆலோசனை பெற்றனர். உடல் பருமன், மார்பக கட்டிகள், அதிகப்படியான மார்பக வளர்ச்சி, சிறுவர்களின் கூடுதலான மார்பக வளர்ச்சி, ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைகள், கழுத்துப்பகுதியில் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் நல பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை டாக்டர் முத்துக்குமார் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார் என மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்