தேனி: ஒரே நாளில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி
தேனி மாவட்டத்தில் இரு வேறு சம்பவங்களில் உடலில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலியாகினர்.
பெரியகுளம் கீழவடகரை ஸ்டேட் வங்கி காலனியில் வசிக்கும் சரவணக்குமார் மனைவி சித்ரா( 28.) இவரது வீட்டருகே ரஞ்சித்குமார் என்பவர் வீடு கட்டி வருகிறார். இதற்கு வாங்கி மின் இணைப்பில் இருந்து மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை கவனிக்காமல் துணி காயப்போட வந்த சித்ரா மீது, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தேனி பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன்( 25.) மின்வாரியத்தில் களப்பணியாளராக பணிபுரிந்த இவர், கடமலைக்குண்டு மின் வழித்தடத்தில் மரங்கள் உரசாமல் இருக்க கிளைகளை வெட்டி அகற்றிக் கொண்டிருந்தார். அதில் ஒரு கிளை மின்சார வயர் மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே விக்னேஸ்வரன் உயிரிழந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu