தேனிமாவட்டம்: பழங்குடியின மக்களுக்கு வன விளை பொருட்களை விற்பனை செய்ய பயிற்சி
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே செல்லான்காலனி ஆதிவாசியின மக்களின் வீட்டில் கலெக்டர் முரளிதரன்
தேனி மாவட்டத்தில் 3 லட்சம் ஏக்கருக்கும் அதிக பரப்பில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனத்திற்குள் 19 ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 485 ஆதிவாசி பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வன விளை பொருட்களை சேகரித்தல், பதப்படுத்துதல், விற்பனை செய்தல் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இது குறித்து, கலெக்டர் முரளிதரன் கூறியதாவது: ஆதிவாசியின மக்கள் வனங்களில் விளையும் கடுக்காய், நெல்லி போன்ற பல பொருட்களை சேகரிக்கின்றனர். குறிப்பாக தேன் அதிகளவில் சேகரிக்கின்றனர். இவற்றை பதப்படுத்தி, விற்பனை செய்ய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. பயிற்சி பெற்ற மகளிர்க்கு வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த மக்களுக்கு ஆண்டுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே பொருட்களை சேகரிக்கும் வேலை கிடைக்கிறது.
மீதம் உள்ள நாட்களில் இவர்கள் விவசாயம் செய்து பிழைக்க வசதியாக பல்வேறு வகையான விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தவிர அத்தனை பழங்குடியின கிராமங்களிலும் அரசு திட்டங்கள் சென்றடையும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரம் உயரும் என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu