கராத்தே போட்டியில் முதலிடம் வென்ற மாணவி : கலெக்டர் பாராட்டு

கராத்தே போட்டியில்   முதலிடம் வென்ற மாணவி :  கலெக்டர் பாராட்டு
X

கராத்தே போட்டியில் முதல் பதக்கம் பெற்ற மாணவி தருணிகாஸ்ரீ தேனி கலெக்டர் முரளீதரனிடம் வாழ்த்து பெற்றார்.

எட்டு மாவட்டங்களுக்கு இடையே நடைபெற்ற கராத்தே போட்டியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவி தருணிகாஸ்ரீ முதல் பரிசு வென்றார்

ராமனாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் 8 மாவட்டங்களுக்கு இடையே நடைபெற்ற மாணவிகளுக்கான கராத்தே போட்டியில் முதல் பரிசை வென்ற மாணவி தருணிகாஸ்ரீயை கலெக்டர் முரளீதரன் பாராட்டினார்.

தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்தவர் தருணிகாஸ்ரீ. இவர் மதுரையில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மதுரை, தேனி, கன்னியாகுமரி, ராமனாதபுரம், துாத்துக்குடி உட்பட எட்டு மாவட்டங்களை சேர்ந்த 800 மாணவிகள் பங்கேற்ற கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் மாணவி தருணிகாஸ்ரீ முதல் பரிசை வென்றார். இன்று அவர் தேனி கலெக்டர் முரளீதரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!