நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை: 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை:   3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
X

நிரம்பி வழியும் பெரியகுளம் சோத்துப்பாறை அணை.

பெரியகுளம் சோத்துப்பாறை அணை நிறைந்து உபரி நீர் முழுமையாக வெளியேறி வருகிறது.

தேனி மாவட்டம், பெரியகுளம் சோத்துப்பாறை அணை நிரம்பி வழிவதால், மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, வரும் தண்ணீர் முழுக்க வெளியேற்றப்பட்டு வருகிறது.

பெரியகுளம் சோத்துப்பாறை அணை, நேற்று இரவு 11.30 மணிக்கு முழு நீர் மட்ட உயரமான 126.28 அடி உயரத்தை கடந்தது. இந்த உயரத்திற்கு மேல் வரும் நீர் முழுக்க, அப்படியே வெளியேறும் வகையில் அணை கட்ப்பட்டுள்ளது. தற்போது அணை நிரம்பியதால், கூடுதலாக வரும் விநாடிக்கு 51 அடி நீரும் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நீர் பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் கிராமங்களை கடந்து செல்லும். எனவே இந்த குறிப்பிட்ட கிராம மக்கள் கவனமாக இருக்குமாறு, மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!