முதல் மனைவிக்கு தெரியாமல் 2ம் திருமணம்: கணவன் உட்பட 9பேர் மீது வழக்கு
தேனி பொம்மையகவுண்டன்பட்டி வடக்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர் லலிதா, 31. இவருக்கும் சுக்குவாடன்பட்டியை சேர்ந்த ஆனந்த ரவி, 36 என்பவருக்கும் இடையே, 2009ல் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 11 பவுன் நகை, 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் கொடுத்துள்ளனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், ஆனந்த ரவிக்கு வேறு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனது மனைவியை அடித்து துன்புறுத்தி உள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் வைத்து அனுசா, 25 என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து, தேனி மகளிர் எஸ்.ஐ., மலரம்மாளிடம், லலிதா புகார் செய்தார். விசாரணை நடத்திய எஸ்.ஐ., மலரம்மாள், இரண்டாம் திருமணம் செய்த ஆனந்த ரவி, அவரது இரண்டாவது மனைவி அனுஷா, திருமணத்திற்கு உடந்தையாக இருந்த 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu