தேனியில் களை கட்டும் பருத்திப்பால் விற்பனை

தேனியில் களை கட்டும்  பருத்திப்பால் விற்பனை
X

தேனியில் நடைபெறும் பருத்திப்பால் விற்பானை

தேனியில் பருத்திப்பால் விற்பானை களை கட்டியுள்ளது. இதனால் பால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பருத்தி விதை சாறு, பச்சரிசி மாவு, வெல்லம், சுக்கு, மிளகு, ஏலக்காய், சித்தரத்தை, திப்பிலி, தேங்காய்ப்பால் உட்பட 11 வகையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது பருத்திப்பால். தேனியில் சிலர் இந்த பருத்திப்பால் தயாரித்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை செய்து வருகின்றனர். பருத்திப்பால் விற்பனையாளர்கள் தங்களுக்கென ரெகுலர் வாடிக்கையாளர்களையும் வைத்துள்ளனர்.

அல்லி்நகரத்தை சேர்ந்த பெருமாள் (46) கூறியதாவது: நான் கடந்த 20 ஆண்டுகளாக தேனியில் பருத்திப்பால் வியாபாரம் செய்கிறேன். வெயில் காலத்தை விட, மழைக்காலம், பனிக்காலத்தில் இதன் விற்பனை அதிகம் இருக்கும். தற்போது எங்களுக்கு சீசன் காலம். வழக்கத்தை விட இருமடங்கு வியாபாரம் இருக்கும். ஒரு கப் பருத்திப்பால் பத்து ரூபாய் மட்டுமே.

நான் ரெகுலராக விற்பனை செய்வதால், கிராமத்தில் இருந்து தேனிக்கு வரும் மக்கள் கூட என்னை தேடி வந்து பருத்திப்பால் வாங்கி சாப்பிட்டு விட்டுச் செல்கின்றனர். தினமும் எனக்கு உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைத்து வருகிறது என்றார்.

Tags

Next Story