ஆட்டோ ஸ்டாண்ட் ஆக மாறிய பெரியகுளம் அம்மா உணவகம்

ஆட்டோ ஸ்டாண்ட் ஆக மாறிய  பெரியகுளம் அம்மா உணவகம்
X

பெரியகுளத்தில் அம்மா உணவகம் ஆட்டோ ஸ்டாண்ட் ஆக மாறி உள்ளது.

பெரியகுளம் அம்மா உணவகம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி ஆட்டோ ஸ்டாண்ட் ஆக மாறி உள்ளது

பெரியகுளம் அம்மா உணவகம் ஆட்டோ ஸ்டாண்ட் ஆக மாறி உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

பெரியகுளத்தின் ஜீவநாடி சோத்துப்பாறை ரோடு. பெரியகுளத்தின் அத்தனை அரசு அலுவலகங்களும், மருத்துவமனைகள், சுற்றுலாதலம், கோயில், வணிக பகுதிகள் என முக்கிய பகுதிகள் அனைத்தும் இந்த பகுதியில் தான் உள்ளது. அதேஅளவு ஆக்கிரமிப்பிலும் சிக்கியிருப்பது இந்த ரோடு தான். இங்கு தான் அம்மா உணவகமும் செயல்பட்டு வருகிறது. அம்மா உணவகம் தற்போது ஆட்டோ ஸ்டாண்ட் ஆக மாறி விட்டது. பசியோடு வருபவர்கள் உள்ளே சென்று உணவருந்தக்கூட முடியவில்லை. இந்த பகுதியை கடந்து ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை. எனவே இந்த ரோட்டில் ஆக்கிரமிப்பினை அகற்றி பொதுமக்கள் சென்று வர தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
future ai robot technology